அனாதை ....

இனி ஒரு பிறவி வேண்டாம்.
பெற்றோர் இன்றி அன்புயில்லை.
சொந்தம் பந்தம் அருகில் இல்லை.
பாசத்தை தேடி நாலு புறமும் அலைகிறேன்.

என் பெயரோ அனாதை ...
அனாதை என்ற பெயரை
சூட்டியது யார் .
என் சமுகம் ..

பெற்றோர் இல்லை என்றால் எப்படி..
நான் அனாதை...
பெற்றோர் இல்லாமல் போனதுதான்
ஏதோ ... நான் செய்த பாவமோ ...

தினம் தினம் குண்டு மழை .
அதன் கொடூரசத்ததின் நடுவே .
எதுவும் அறியா குழந்தையே...

நான் சிறு வயதிலே
பாவி மக்கள் எனக்கு இட்ட பெயர் அனாதை .

என் பெற்றோர் இறந்ததுக்கு
நான் காரணமோ இல்லையே ...
போர் சூழ் நிலை ...
அன்பின்றி அடிமையாக ...

சிறு வயதில் இருந்து...
இன்றுவரை ...
என் மன வடுக்கள்.
யார்தான் அறிவார் ...

பாடசாலை சென்று
படிக்க போனால் ...
ஆசிரியர் கூறுவதோ
பெற்றோரை பறிகொடுத்தவள்...
நீ பாவம் ...

என்ன கொடுமையப்பா...
அனாதையா நான் என்னை...
நான் கேள்விகள் கேட்டு கொண்டேன் ...

காலதின் கட்டாயமோ ...
படுத்து உறங்க இல்லம் இல்லை ...
நாடோடியாக ஓடி ஓடி
கலைத்து விட்டேன் ..

குண்டு மழையில் இருந்து தப்பிக்க
தெரு தெருவாய் ஓடினேன்
என் பெயரோ அனாதை ...

இப்போ ஊரை விட்டு ஓடியோடி ...
என் பெயரோ ஏழை ....
மரத்தின் கீழ் உறங்கிய நாட்கள் ...

அழுக்கான ஆடைகள் ...
மாற்றி உடுக்க மறைவிடம் இல்லை .
என்ன உலகம் அப்பப்பா ...
அனாதை அனாதை தானா ...

எந்த ஒரு சந்தோஷமும் இல்லாத
பிறவி நானோ...
கூலி வேலைக்கு போனேன் ..
ஒரு வேளை உணவுக்காக ...
தினமும் துன்பப்பட்டேன் ...
பாதணி இன்றி வெயிலில்
கால்கள் சுருண்டன...

மணலில் நடந்து நடந்து .
சோர்ந்து போய் விட்ட
என் பிஞ்சு கால்கள் .

தாய் மண்ணை இழந்து .
இன்று அந்நிய மண்ணில் ...
அந்நிய காற்று அந்நிய மொழி ...

என் நிலையை எண்ணி .
நான் என்ன செய்ய முடியும்.
மனதில் வடுக்கள்...
என்னை தொட்ட சோதனைகள் தீரவில்லை .

எழுதியவர் : தமிழ் அழகி சிந்து (14-Aug-13, 1:04 pm)
பார்வை : 2941

மேலே