!!..அய்யகோ....என்ன இது..!!
-இன்று
எப்படியாவது
கவிதை
எழுதிவிட வேண்டுமென்ற
தீர்க்கத்தோடு
அமர்ந்தேன்..
என்தாளும் கோளும்
இதழமைக்கும்
சமயம்....
எப்படியோ தெரிந்துகொண்ட
மின்சாரம்..
திடீரென
கண்களை மூடி
வெட்கப்பட்டது..
அட ச் சே..!!!
(என் பள்ளிக்கால நிகழ்வு கவிதை இது....
இதை எழுதிய தாள் நேற்று தற்செயலாய் கையில் கிடைத்தது.)
(தற்செயலுக்கு நன்றி..!)
(இங்கு தாளும் கோளும் என்பது... தாள் என்பது காகிதம்.. கோள் என்பது அம்புலி, வியாழன், காரி போன்ற கிரகம் பற்றி... அதாவது என் தாள்களில் ஏதேனும் கிரகம் பற்றி கற்பனைகள் என் தாளை முத்தமிடும் சமயம் மின்சாரம் வெட்கப்பட்டதாய் பதித்திருக்கிறேன்.
தாளும் கோளும் என்றால் அது சராசரி கற்பனையாகிவிடும் என்பதால் இப்படி முயற்சித்தேன்..)
-வரிகள்...
க.ஷர்மா.