வினவுங்கள் நமை மறந்த மனிதரை..
சனநாயகத்தின் அங்கமே சட்டமன்றம்
சான்றோர் பலர் சங்கமித்த மன்றம்
வாக்களிக்கும் மக்களின் மன்றம்
வாதங்கள் வன்முறையான மன்றம் !
காட்சியால் நெஞ்சம் பொங்குகிறது
கட்டிய அலுவலகம் தொழுவமானது !
குறைகேட்கும் இடமோ மூடியுள்ளது
இரைக்காக காலினம் காத்திருக்குது !
வெற்றிப் பெற்றவரெலாம் காணலையே !
பெற்றுத்தந்த நாமெலாம் கண்ணீரிலே !
செலுத்தும் நம் வரிப்பணம் வீணாகுது
சென்றைடையும் இடமும் மண்ணாகுது !
கண்டிடும் உள்ளங்களே சிந்திப்பீர் இனி
வென்றிடும் வேட்பாளரை கண்டிடுவீர் !
வினவுங்கள் நமை மறந்த மனிதரை
விரல் மையால் வெற்றிப் பெற்றவரை !
பழனி குமார்