எங்கே சுதந்திரம்........

படிக்கும் கல்லூரியில்
சுதந்திரமா?
நினைத்த பிரிவை எடுத்து
படிக்க விடுவதில்லை....

பலர் நிறைந்த சபையில்
சொல்ல வந்த
கருத்துக்கு
சுதந்திரமா?
இல்லை......

பூட்டிய வீட்டிற்குள்
சுதந்திரமா?
திருடர் பயம்

கணவன் வீட்டில்
சுதந்திரமா?
அடக்கி வைக்கப்பட்ட நிலை....

அவ்வளவு ஏன்?
கருவில் இருக்கும்
குழந்தைக்கே சுதந்திரமில்லை
ஏன் என்றால்
தாய் உண்ணும் உணவை மட்டும்
எடுத்துக் கொண்டு
கருவை வளரவிடாமல்
கண்ட மாத்திரைகளையும்
எடுக்க வைத்து.....

எங்கே சுதந்திரம்???

எழுதியவர் : சாந்தி (15-Aug-13, 9:45 pm)
Tanglish : engae suthanthiram
பார்வை : 85

புதிய படைப்புகள்

மேலே