எப்போது கிடைக்கும் சுதந்திரம் ???
சுதந்திரம்...
எப்போது கிடைக்கும் சுதந்திரம் ???
"அ"னாதை இல்லங்கள்
அழிக்கப்படும்போது
"ஆ"தரவற்றோர்கள்
அரவணைக்கப்படும்போது
"இ"ல்லாதவனுக்கு
இருப்பிடம் கிடைக்கும்போது
"ஈ"கைப்பண்பு
பணம் படைத்தவன்
நெஞ்சில் துளிர்விடும்போது
"உ"ணவில்லா ஏழையின்
பசி ஆரும்போது
"ஊ"ருக்குப்பாடுபட
உள்ளம் முன்வரும்போது
"எ"ழில் பொங்கும் இயற்கை
அழிக்கப்படாதபோது
"ஏ"ழைகளுக்கும் படிப்பு
ஏமாற்றமில்லாமல் கிடைக்கும்போது
"ஐ"ந்தாண்டு ஆட்சியும்
மக்களுக்காக மட்டுமே நடத்தப்படும்போது
"ஒ"துக்கப்பட்ட மக்கள் ஒருபடியாவது முன்னேற்றப்படும்போது
"ஓ"லைக்குடிசையின் கூரை ஓட்டைகளில் ஒன்றாவது அடைக்கப்படும்போது
"ஔ"வை பாட்டிக்கு தரப்படும் அதே மரியாதை
நம் பாட்டிக்கும் தரப்படும்போது
"ஃ"அஃறிணையையும் உயர்திணையாய் மதித்துப்பார்க்கும்போது
அதுதான் முழுச்சுதந்திரம்
தீர்க்கமான சுதந்திரம்
என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
எழுத்து மற்றும் ஓவியம்
ஜெகன்.G