நம்பிக்கை மீது நம்பிக்கை வை
விழித்திடுவோம்
என்ற நம்பிக்கையில்
தினம் உறங்க செல்கின்றோம்
செழித்திடுவோம்
என்ற நம்பிக்கையில்
தினம் உழைக்க செல்கின்றோம்
இருந்திடுவோம்
என்ற நம்பிக்கையில்
தினம் கடந்து செல்கின்றோம்
இறந்திடுவோம்
என்ற நம்பிக்கையில்
தினம் பயந்து வாழ்கின்றோம்
கனி பல பெற்றிடுவோம்
என்ற நம்பிக்கையில்
சிறு விதை விதைக்கின்றோம்
பணி பல முடித்திடுவோம்
என்ற நம்பிக்கையில்
தினம் பணி துவக்குகின்றோம்
கடல்தனை கடந்திடுவோம்
என்ற நம்பிக்கையில்
சிறு கலம் எடுக்கின்றோம்
கரைதனை அடைந்திடுவோம்
என்ற நம்பிக்கையில்
பெருங்கடல் இறங்குகின்றோம்
இறை அருள் பெற்றிடுவோம்
என்ற நம்பிக்கையில்
தினம் இறை வணங்குகின்றோம்
நிறை பலன் பெற்றிடுவோம்
என்ற நம்பிக்கையில்
நம் குறை களைகின்றோம்
முதல் தரம் எடுத்திடுவோம்
என்ற நம்பிக்கையில்
அனுதினம் படிக்கின்றோம்
உடல் பலம் பெற்றிடுவோம்
என்ற நம்பிக்கையில்
உடற்பயிற்சி செய்கின்றோம்
தும்பிக்கை உடைய யனையிடமும்
உள்ளது நம்பிக்கை - எனவே
நம்பிக்கை மீது நம்பிக்கை வை நண்பனே
நாளைய உலகம் உன் கையில்.
வெ. பாலாஜி, நாமக்கல்,