அழிந்த உன் சுவடுகள்...!!

காலங்களின் சுழற்சிகளின் ஊடே
உன் நினைவுகளும் சுழல்கின்றன
அன்றைய உன் அன்பின் நிஜங்கள்
இன்று நிழலாய் மனதை தொட்டு செல்கின்றன

பேசிப் பழகிய நாட்களின் நிமிடங்கள்
இன்று மௌனத்தின் நொடிகளாய்
நீள்கின்றன....!!!!! சாலை ஓரத்தில்
வீசும் தென்றல் காற்றின் சுகமான
தடங்களுடன், அழிந்த உன் சுவடுகளை
நோக்கி நடை பிணமாய் நகர்கிறேன் ..!!!!

எழுதியவர் : (16-Aug-13, 6:40 pm)
சேர்த்தது : vinogini
பார்வை : 44

மேலே