சினிமா ....! சினிமா ....!
சினிமா ....! சினிமா ....!
------------------------------------
சில்லறையை சேத்துக்கலாம்
சேட்டைகள் பல பண்ணிடலாம்
முகத்தில் அரிதாரம் புசியே
ஆளையும் மயக்கிடலாம்
சினிமா எனபது ஒரு கனவு தொழிற்சாலை
சினிமா கனவு கண்டு கொண்டே பலர்
பள்ளத்தில் விழுந்து மடிந்து விட்டார்
பாவம் அவர் வாழ்வு இழந்து விட்டார்
பக்குவமாய் வந்து பாடி ஆடி நடித்தவரெல்லாம்
சினிமாவில் பட்டா போட்டு வாழ்ந்திட்டார்
பாரெல்லாம் புகழ பல கோடி சேர்த்திட்டார்
மக்கள் மனதில் இன்றும் நின்றிட்டார் ......!
மாயா உலக சினிமாவில் மர்மங்கள் பல உண்டு
பல் விழுந்த கிழவியையும் பாவையாய்
காட்டிடுவார் ..! கிழவனையும் குமரனாய்
காட்டியே சில்லறைகளை சேர்த்திடுவார் ....!
அரசியல் வந்ததும் ஆன்மிகம் வந்ததும்
இந்த சினிமாவில் தான் ...! வாத்தியார்
வந்ததும் சூப்பர் ஸ்டார் வந்ததும் இந்த
சினிமாவில் தான் ..!இந்த மக்கள் சினிமா தான் !
பெரியார் கருத்துக்களும் அண்ணாவின் தமிழும்
புயலாய் வந்தது இந்த சினிமாவில் தான்
கலைஞரின் கருத்தான தமிழும் கன்னித்
தமிழ் நடையும் காற்றாய் வந்தது இந்த சினிமாவில் தான் .....................................!
கண்ணதாசனின் பாடல் வரிகளும்
வாலிப வாலியின் வைர வரிகளும்
வைர முத்துவின் வார்த்தைகளும்
வந்து விழுந்தது இந்த சினிமாவில் தான் !
சௌந்தர்யமன ராஜனின் குரலும்(டி.எம்.எஸ் )
சுசிலாவின் சுந்தர குரலும் ஜானகியின்
ஜனரஞ்சகக் குரலும் பி பி எஸ் இன் பின்னணி
குரலும் சின்னக் குயில் சித்திராவின் செந் தேன்
தமிழும் எஸ் .பி..பி யின் வசீகர குரலும்
ரசிகர்கலை வழங்கியதும் இந்த சினிமா தான் !
என்.எஸ்.கே வின் சிந்தனைகளும்
நாகேஷின் நாட்டிய நடிப்பும் வந்தது இந்த
சினிமாதான் ... சௌக்காரின் நடிப்பும்
சரோஜாவின் கிள்ளை மொழி துடிப்பும்
எம் .ஜி .யார் இன் இளமை நடிப்பும்
சிவாஜி யின் துடிப்பான இமய நடிப்பும்
உலக நாயகனை உருவாக்கியதும்
கே.பி .யின் சிந்தனை கருதும் வந்தது
இந்த சினிமாவில் தான் .........................!
பானுமதியின் பாட்டும் சந்திர பாபுவின்
சேட்டையும் செய்து காட்டியது இந்த சினிமாவில்
தான் ..! இளைய ராஜாவின் இன்னிசையும்
ரகு மானின் இசையும் ஓடி வந்தது இந்த
சினிமாவில் தான் ..............................................!
சினிமா .....! சினிமா ....! நீ இல்லாத வீடே இல்லை
நீ இல்லா விட்டாலும் தினமும் தொல்லை
மௌனமாய் வந்து மயக்கம் பல தந்து
கதையாலே கட்டிபோட்டு பாட்டாலே மயக்கி
இசையலே இனிமை சேர்த்திட்டாய் !
மக்கள் மனதில் இடம் பிடித்த சினிமாவே
நீ வண்ணத் திரையாய் இருந்து இப்போ
சின்னத் திரையிலும் நுழைந்து விட்டாய் ..!
சினிமா ..! சினிமாவே....! நீ எங்களை விட்டு
போகும் நாள் எப்போது .................................?

