இறைவனே வா இனிமையை பழக்குகிறேன்...!

உயர உயர உயர நானும் பறப்பேன்
உலகம் கடுக்காய் மாறக் காண்பேன்
எதிரில் இறைவன் தென் பட்டால்
என் விசிட்டிங் கார்டு கொடுப்பேன்
பேச நேரம் இல்லையப்பா
பிறகு வா பார்க்கலாம் என்பேன்.....
வரம் தருகிறேன் வேண்டுமா என்பான்
வாய் விட்டே நான் சிரிப்பேன்.....
இந்த வாழ்வின் ரகசியத்தை -
இனிய வரமாய் அவன் பெறுவான்
இறைவனும் எனைப் போல் சிரிக்கப் பழகி
இடி ஓசையையும் இனி குழல் ஓசையாக்குவான்..
அட......
ஆண்டவன் சிரிப்பை பழகிக் கொண்டான்....
அங்கே கூவுகிறது குயில்.........