யார் அறிவார்?

என் உடல் நீங்கிய என்னுயிர் காற்று
கவிதையின் முகவரியை
கையில் தந்துவிட்டு
கல்லறைக்குள் தள்ளிவிட்ட
காயம் ஆறி அடங்கும் முன்

காயம் குறைக்க
நெஞ்சு தடவி
நெருடி விட வருவதைப்
போல் வந்த
நந்தவன தென்றல்
என் கல்லறையின் மீது
காகித பூக்களை
வீசி சென்றுவிட்டது

மெய்யென நினைந்த
தென்றல் மெய்யெனினும்
பொய்யாய் போனது
அதன் பூப்போன்ற ஸ்பரிசம்

கல்லறை உடைக்க
வந்ததென நினைத்த தென்றல்
கசிந்தொழுகி ஓடி
கல்லறையின் மீது
கல்லணை கட்டி சென்றது!

இதோ
அமைதியாய் என் சமாதி!
அதனுள்ளான
அவலக்குரல்.....
யார் அறிவார்?!


-தமிழ்மணி

எழுதியவர் : தமிழ்மணி (18-Aug-13, 10:56 pm)
பார்வை : 117

மேலே