பூவையே என் பூவையாய்...
பூவைப் பறிக்காமல்
செடியிலே வைத்து
உன்னை தெய்வமாய்
அதிலே வைத்து
கோவிலாய் தொழுதவன் யான்
நீ எனை நாஸ்திகன் என்று
ஓர் கோவில் தேடி
தஞ்சமடைய நினைக்கிறாய்.
இப் பூ செடியில் அதன்
ஆயுள் வரை தங்க முடியுமா?
நீ பறிக்கப்படும் போது
கோவிலுக்காய் உரிமை
கொண்டாட முடியுமா?
ஆயுளை தான் தக்க
வைக்க முடியுமா?
கோவில் என்று
வீதியிலே விட்டெறிந்து
இன்று உன் ஆயுள் முடியு முன்
நீ யார் யாரரோ
காலில் மிதிபட
உனக்காய் அதனை
இழிவு என்றும் நினைக்காமல்
குறையுடன் கையில் எடுத்து
அதன் மென்மை காக்கவும்
நினைத்தவன் யான்
ஆனால் செடி ஒன்றுடன்
ஒப்பந்தம் செய்து விட்டேன்
ஆயுள் வரை
என் மனைக்கு பூவாக
அதுவே என் மனைவியாக..
பாவம் நீ....