உன் இன்மையில்!!

நீ தென்றலாய் போகும் வழியே!
உன்னை தரிசிக்க தேடும் என் விழியே!
அது இன்று உன் இன்மை உணர மறுக்குதடி!!

குளிர்க்கால வெண் பனியே!
வான் பார்த்த என் பூமியை தொட்ட முதல் மழையே !
அது இன்று என்விழி வழியே பொழியுதடி!!

முத்துபுன் முறுவிடும் தெத்து பல் கிளியே!
கடந்து போனதென் என்நிழல் தாண்டி வெளியே!
அது இன்று காரிருளில் தன்மரணம் தேடுதடி!!

என் நரம்பில் குருதியாய் பாய்ந்தோடிய நதியே!
என் இதய வானில் என்றென்றும் நீதான் முழு மதியே!
அது இன்று மழைமேகம் கொண்டு கரிபூசி கொண்டதடி!!

எழுதியவர் : ஜெகதீஷ் தேவராஜன் (19-Aug-13, 1:45 am)
பார்வை : 140

மேலே