இறக்கும் வரை இருக்கும் இந்தவலி

இரக்கமற்ற மிருகங்களின்
இழிவான செயல்களால்
இதயம் முழுதும் கனத்துப்போய்
இறுதிவரை இருக்கும் வலி ...........

மரங்களை வெட்டுவதற்கு
மனிதன் இன்று தயங்குகிறான்
மனிதர்களை கொள்வதற்கு
இருந்தும் ஏனோ துணிகிறான் ..........

ஆட்சிவெறி பிடித்துப்போய்
ஆணவம் தலைக்கேறி
சிங்களவர்கள் சிரிக்கிறார்கள்
தமிழன் அங்கு அழுகிறான் .........

அடக்குமுறை ஆட்சியாலே
ஆளுதங்கே மிருக இனம்
அத்தனை தமிழர்களையும்
கொள்வதொன்றே அவர்கள் குணம் ........

வாய்விட்டு பேசாதவர்களையும்
போரிட்டு அழிக்கிறார்கள்
இயந்திரத்தின் துணைகொண்டு
தமிழினத்தை சிதைக்கிறார்கள் ..........

வீறுகொண்டு எழுந்தவர்களை
வேரோடு அழித்தார்கள்
நியாயங்களை மறந்துவிட்டு
அநியாயம் செய்கிறார்கள் ...........

தூண்டுகிறான் எதிரி ஒருத்தன்
துரத்துகிறான் துரோகி பலர்
தூங்குகிறது இந்திய அரசு
துணிந்துவிட்டது இலங்கை அரசு ...........

நரிகள் கூட்டம் ஒன்று சேர்ந்து
புலி ஒன்றை அழித்தது
துரோகிகளின் துணையோடு
எளிதில் படை வென்றது .........

சாகும்வரை போரிட்டு
சரித்திர மரணம் கண்டது
புலி இனத்தை காத்திடவே
வீரமரணம் கண்டது ..........

இறக்கம் மறந்த சிங்களவனுக்கு
இதயம் இயங்க மறுத்தது
என்னினத்தின் பெண்களையெல்லாம்
கதற கர்ப்பை அழித்தது ..........

பட்டினி கிடந்த வயித்துக்கெல்லாம்
பச்ச தண்ணியும் கிடைக்கல
காயம் பட்ட உடல்களுக்கும்
மருத்துவமும் பார்க்கல ...........

பெத்தவங்க கண்ணெதிரே
பெண்கள் கற்ப்பு அழிந்தது
பெரும் கொடுமை நிலையைகண்டு
தாயுள்ளம் செத்தது ..........

உலகை ஆண்ட தமிழன் இன்று
உயிரை காக்க ஓடினான்
கண்முன்னே நடந்ததை எண்ணி
இதய வலியாலே துடிக்கிறான் .......

உலகில் இருக்கும் காலம்வரை
உயிரை கொள்ளும் இந்த நினைவு
எது வந்து மறைந்த பின்பும்
இறக்கும் வரை இருக்கும் வலி

எழுதியவர் : வினாயகமுருகன் (19-Aug-13, 2:05 pm)
பார்வை : 186

மேலே