தேவதையின் வரம்
எப்போதோ சாப்பிட்ட முந்திரி பழ வாசனை போல
நனவிலி மனதின் அடுக்குகளில் உள்ள உன் ஞாபகம்
உன்னை அவ்வப்போது தேடுகிறது.
என் புலன் காட்சி முழுதும் ஒரே பொருளாய்
நீ இருந்த காலத்தில் நீ கூறிய வார்த்தைகள்...
என்னைவிட உனக்கு நல்ல பெண்
மனைவியாக அமைவாள் என்று.....
அது தேவதையின் வரம்
என்று எனக்கு அப்போது தெரியாது.....
உன்னை என் நனவு மனம் தேடுகிறது.....
நீ அருளிய வரம் பலித்தது
என்று சொல்லி கொள்ள மட்டுமே......