தாயின் தவிப்பு..
அன்று
தாலாட்டி சீராட்டி
தாய் பாலை நான் ஊட்டி ....
தங்க ராசா உன்னை தங்கமா நான் பார்த்தேன்..
இன்று..
உன் வீட்டில் நீ வளர்க்கும் ஐந்தறிவு
ஜீவனுக்கு நீ தரும் சலுகையில்..
ஒரு பகுதியும் எனக்கில்லையே..
அன்று
சீரும் சிறப்பும் உனக்கு கிடைக்க..
உன் பேரை நான் சொல்லி மார் தட்டி நான் கொள்ள..
சிறுக சிறுக நான் மெலிந்தேன்..
கை கிடைக்கும் கூலி வேலை நான் செய்து..
இன்று..
கை நிறைய நீ சம்பாதிக்க..
ஊர் மெச்ச நீ இருக்க..
என் பெயர் மட்டும் நீ சொல்ல
நாணம் உன்னை கொள்ளை கொண்டதென்ன ??
அன்று
கல்லும் முள்ளும் என் பாதம் பணிய
காடு மேடு நான் நடந்தேன் கால் வலிக்க...
குட்டி ராசா உன்னை சுமந்து..
இன்று
வயது முதிர்ந்து நான் கிடக்க..
மூலை முடுக்கில் என்னை தள்ள..
கால் தடுக்கி நான் விழுந்தும்
தாங்கி கொள்ள நாதியில்லை..
அன்று
துணை ஒன்று உனக்கு தர..
தாரம் ஒன்று நான் பார்த்தேன்..
இன்று
துணை ஒன்று எனக்கும் தந்தாய்..
பட்டு போனவர் முதியோர் காபகத்தில்...