அறம் செய விரும்பு
1 அறம் செய விரும்பு. - தானம், தர்மம் செய்ய ஆசை படு.
2 ஆறுவது சினம். - நமக்கு கட்டு பட கூடியது கோபம்.
3 இயல்வது கரவேல். - இருப்பதை இல்லை என்று சொல்லாதே.
4 ஈவது விலக்கேல். - பிறருக்கு கொடுப்பதை நிறுத்தாதே.
5 உடையது விளம்பேல். - நம்முடய நிறை, குறைகளை பிறரிடம் சொல்லாதே.
6 ஊக்கமது கைவிடேல். - முயற்சியை விட்டுவிடாதே.
7 எண் எழுத்து இகழேல். - எண்ணத்தையும், எழுத்தையும்(கருத்தையும்) இகழாதே.
8 ஏற்பது இகழ்ச்சி. - உழைப்பின்றி பிறரிடம் வாங்குவது அவமானம்.
9 ஐயம் இட்டு உண். இல்லாதவர்களுக்கு கொடுத்து பகிர்ந்து உண்ணு.
10 ஒப்புரவு ஒழுகு. - பிறரிடம் ஒற்றுமையோடு இரு.
11 ஓதுவது ஒழியேல். - படிப்பதையும், படித்ததை பிறருக்கு சொல்லி கொடுப்பதையும் தவிர்க்காதே.
12 ஔவியம் பேசேல். - பொருத்தமற்றதை பேசாதே.
13 அஃகஞ் சுருக்கேல். - எடையை குறைக்கதே.