பழக்கம்
சாக்கு பையில் அடைத்து,
இருளில் பல தெருக்கள் கடந்து
எதிர் திசையில், போகும் வழி
நன்கு குழப்பி விட்டு, மெதுவாக இருட்டில்
வெளியே விட்டுவிட்டு
திரும்பி பாராமல் வேகமாக வீட்டுக்கு ஓடி
வந்து தூங்கி, காலையில்
எழுந்தது மியாவ் என்னும்
சப்தம் கேட்டு....
பழக்கப் பூனைகள்......