ஏக பத்தினி விரதன்

இரவினில் முழுமதி
விடியலில் தாமரை
எதிரினில் காதலி
எழுதிட கவிதைகள்....
எழுந்திடும் நினைவுகள்
மகிழ்ந்திடும் நிமிடங்கள்
அருகினில் காதலால்
அனைத்துமே இன்பங்கள்....
தொடுகிறேன் கனவினில்
தென்றலின் ஸ்பரிசங்கள்
கொசுக்கடி வலிக்கவே..
அடிக்கிறேன் நச்சென...
குறட்டையை விரட்டியே
கோபமும் திரட்டியே
விழிக்கிறாள் மனைவியே...நான்
அடித்தது அவளையே.....!
கொசுவென நினைத்தீரோ
கொடுமைக்கார கணவரே என்றாள்...
கொஞ்சு மொழி இனிமைஎன்றேன்
கொடுத்து வைத்த கனவில் மீண்டும் காதலி....!
அவள் வேறு யாருமல்ல.....
இந்த எழுபது வயது மனைவியின்
இருபது வயதுத் தோற்றம்.........