நான் சர்வாதிகாரியா.....? எதிர்க் கேள்வி கேட்கும் மகிந்தா ராஜபக்சே...!

ஜனநாயக ஆட்சில் வாழ்ந்து வரும் பலர், தனக்கு எதிராக சர்வாதிகாரி என்ற பட்டதை சூட்டி வருவதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்...

எதற்காக தம்மை சர்வாதிகாரி என அழைக்கின்றார்கள் என்பது புரியவில்லை என்று
வேறு எதிர்க் கேள்வியை எழுப்பியுள்ளார்...சிங்கள மொழியில் இல்லாத வார்த்தைகளினால் இணைய தளங்களிலும் ஏனைய அச்சு ஊடகங்களிலும் தமக்கு எதிராக சேறு பூசப்பட்டு வருவதாக தெரிவித்து விட்டு, இவ்வாறு குற்றம் சுமத்தும் அளவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்..

நாட்டு மக்கள் உச்ச அளவில் கருத்து சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றார். நாட்டு மக்கள் யார் ஆட்சி புரிய வேண்டுமென தீர்மானிப்பதாகவும் அதற்கான உரிமையை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்....

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகளும் சர்வதேச அரங்கில் நாட்டைக் காட்டிக் கொடுத்து வருவதாக கூறினார்...இந்த சக்திகளுக்கு எதிராக நாம் போராட வேண்டிய அவசியம் எழுத்துள்ளது என்றும்,

எமது நாடு மிகவும் மோசமானதாகக் காணப்படுகின்றது என்பதனை உலகிற்கு உணர்த்தவே சிலர் முயற்சித்து வருகிறார்கள்...
நாட்டின் சகல மாகானங்களும் அபிவிருத்தியின் நன்மைகளை பெற்று வருவதாக தேர்தல் பிரசாரக் கூட்டத்கில் இவ்வாறு பேசியுள்ளார்...மகிந்த ராஜபக்சே ...!

மகிந்த ராஜபக்சே சர்வாதிகாரியா...போர்க்குற்றவாளியா...
இனப் படுகொலையாளனா...? என்றெல்லாம் ஒற்றை வரிக்குள் அடைத்து விடாமல் மூன்று மாபாதக செயலை புரிந்தவன் என்று உலகில் உள்ள அணைத்து சமூக ஆர்வலர்களும் மனித உரிமையாளர்களும் கூறிவரும் வேளையில்....

என்னை சர்வாதிகாரி என்று சொல்லிக் கொள்ளும் கருத்து சுதந்திரம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறிவருவதை என்னவென்று சொல்வது...?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (21-Aug-13, 12:48 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 72

சிறந்த கட்டுரைகள்

மேலே