மீண்டும்!

மீண்டும் நடக்க கூடாது என நினைப்பவையே மீண்டும் மீண்டும் நடந்து கொண்டு இருக்கிறது.
உன்னுடன் அடியெடுத்து வைக்க ஆசைப்பட்ட இடத்தில் இன்று நான் மட்டும் தனியே!
உனக்காக இடம் என் அருகில் இருந்தும் வெறுமையாய் வெறுப்பை சுமந்து நிற்கிறது!
சுவாசித்து கடந்த இடங்களை பல வருடங்கள் கழித்து அதே சுவாசத்தினால் நிரப்பும் நிமிடங்களில் மனம் முழுவதும் நிரம்பி இருக்கிறது .. நினைவுகள்!
நினைவும் சுமையென தெரியவில்லை.. வருடி கொடுக்கும் பழைய குரலொலிகள் முன்பு!
நானாக வருத்தி நினைவுகளை தேடவில்லை.. அனைத்தும் நிழற்படமாய் மனத்திரையில் ஓடிக் கொண்டு இருக்கிறது!
இடத்தை விட்டு அகல நினைத்தாலும், மனம் எழவில்லை... முழுவதுமாய் நினைவில் வீழ்ந்து போனப்பின்!
இறுதி வரை போராட்டம் என்னுள் மட்டும் தான்... அனைத்தையும் தாங்கிக் கொண்டு!