கல்லிலே கலை வண்ணம் கண்டார்:
கற்பனை செய்தால் மட்டும் போதும்,
கற்பனையில் நினைக்கும் வடிவம்,
கல்லிலே கிடைக்குமா? கல்லில்
செதுக்கிய உருவம் எழிலாய் இருந்தாலும்
உயிர் பெறுமா? உயிர் பெற்றாலும்
அதற்குப் படைத்தவனின் தாகம்
புரியுமா?தாகம் புரிந்தாலும் பதுமை
பேசுமா? தன் உணர்வுகளை மனசில்
போட்டு புதைக்காமல் வெளிப்படுத்துமா?
அந்த உணர்வுகள் படைத்தவனுக்கு
புரிந்து கொள்ள முடியுமா?படைப்பும்,
படைத்தவனும் வேறு, வேறா? இல்லை
ஒன்றுக்குள் ஒன்று தானா? வேறென்று
நினைத்தால் என்ன ஆகும், ஒன்றென்று
இருந்தால் என்ன ஆகும்? இதெல்லாம்
யார் அறிவார்? கண்டவர் விண்டிலர்...