புத்துணர்வு.........
முடிவிலிகளாய்த் தொடரும்
எதிர்பார்ப்புகளின் முடிவில்
வாழ்க்கை துவங்குகிறது,,,,
ஆசைகள் எல்லாம் கைகூடிவிட்டால்
அதன் அர்த்தத்தின் ஓசைகள்
நிசப்தத்தில் கரைந்துவிடும்...
விழுந்தும் உடையாதிருக்க இது
நிழல் அல்ல....நிஜம்
விழுதலின் புரிதல்
எழுதலுக்கு அழகு சேர்க்கிறது....
கரையை அலைகள் தொடுவது மீண்டும்
கடலில் சேர்வதற்காக...
ஒவ்வொரு நிராகரிப்பும்
ஏற்றுக் கொள்வதின் புதிய அழைப்பே...
யதார்த்தத்தின் கண் சிமிட்டலில்
எந்திரம் மீண்டும் இயங்கத் துவங்குகிறது!
புத்துணர்வு......கவிமகன் காதர்