வருத்தம்………
குயில் பாட குருவி சீடியது
குருவி சீட சேவல் கூவியது
சேவல் கூவ காகம் கரைத்தது
காகம் கரைக்க – இவையெல்லாம்
என்னை மெல்ல எழுப்பியது
மெல்ல எழுப்பியது எனக்கும் பிடித்தது
எனக்கு பிடித்தது என் கைபேசியும் அடக்கியது
கைபேசியடக்கியது சத்தத்துடன் எழுப்பியது
என் மகனை!
என் மகன் எழுந்த போது நான் கண்ட யாவும் அவன் காணவில்லை
வருத்தம்………