தோழனே எழு - நாகூர் கவி

தொலைவில்
தெரியும் வானமும்...

உன் விழியின்
அருகில் தானடா...

மறைந்தே
செல்லும் காற்றும்...

உனைத் தொட்டே
தினமும் செல்லுமடா...

விழுந்திடு
ஒரு விதையாய்...

எழுந்திடு
புது மரமாய்...

கனி கொடு
நீ நாளை...

விழுமே
கழுத்தில் மாலை...

அறிவு என்னும்
விளக்கை ஏற்று...

அறியாமை என்னும்
இருளை அகற்று...!

எழுதியவர் : நாகூர் கவி (22-Aug-13, 11:20 pm)
பார்வை : 355

மேலே