கருணை உள்ளம் கொண்ட நண்பா........

அனைத்து நண்பர்களுக்கும்
எனது வாழ்த்துகள்.

எனது நண்பர் ஒருவர் எனக்கு
ஒரு குறுச்செய்தி
(sms) அனுப்பி இருந்தார்.
அதில் இருந்த செய்தி

யாதெனில்..................

எனது பெயர் கார்த்திக் என்றும் நான்
ஒரு விபத்தில் எனது கண்களை இழந்து விட்டேன் . ஆகையால் இந்த குருச்செய்தியை தங்களின் நண்பர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டு அதில் அவர்களின் அலைப் பேசி (mobile no) கொடுக்கப் பட்டிருந்தது.

எனது நண்பர் தனது கருணை உள்ளத்தால் அதை எனக்கு அனுப்பி வைத்தார்.
நான் அதில் உள்ள அனைத்து எண்களுக்கும் தொடர்பு கொண்ட போது எந்த எண்களும் பயன் பாட்டில் இல்லை.

இந்த செய்தியை எனது நண்பரிடம் பகிர்ந்துக் கொண்டேன்.

எனது அனைத்து நண்பர்களுக்கும் ஒரு சிறிய வேண்டுகோள்............

இனி தங்களுக்கு வரும் இது போன்ற
செய்திகளை உண்மை தானா என்பதை
உறுதி செய்து கொண்டு அதை நண்பர்களுக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

யாரையும் புண்படுத்த அல்ல.....
புனிதப் படுத்த மட்டுமே.....

விழித்திருப்போம்! விழிப்புணர்வு செய்வோம்!!

எழுதியவர் : புன்னகை பாஷா (23-Aug-13, 7:06 am)
சேர்த்தது : புன்னகை பாஷா
பார்வை : 251

மேலே