தமிழ் என் உயிர்!

தமிழே தனிப்பெருமைகளை தன்னகத்தே கொண்டும்
தன்னை நாடுவோர்க்கு தங்குமிடம் தந்தும்
தருமமே தலையெனக் கொண்டோர் வாழ்ந்தும்
தலை கணம் கொண்டோர் வீழ்ந்தும்
தலைவனாக திராவிட மொழிகளுக்கெல்லாம் விளங்கியும்
தற்காலத்திலும் தன்பெருமை மாறாமல் உள்ளாய்
தமிழே நீயோ பாலிடப்பட்ட கிண்ணம்-யானோ
தத்தித்தாவி உன்னை நாடிவரும் அன்னம்.

எழுதியவர் : நந்து (23-Aug-13, 9:55 am)
பார்வை : 1868

மேலே