தமிழ் கவி படி - நாகூர் கவி
வாடினோர் உள்ளம்
சுகம் பெற....
நாடினோர் எல்லாம்
அகம் பெற...!
தமிழ் படி... - அதற்கு
இது முதல் படி...!
என் தமிழை நீ படித்தால்
நொடியில் மடியும்
கவலைகள் யாவும்...!
கண்ணீர் மல்க நீ கேட்டால்
கைக்குட்டையாக வந்திடுவாள்...
காணும் கண்ணில் துள்ளுகின்றாள்
கவிஞன் நெஞ்சை அள்ளுகின்றாள்...!
தமிழ் பேரைச் சொல்லி
கவி நீ கேளு...
அவள் கதவிற்கில்லை
என்றும் தாப்பாளு...
தமிழ் பெரைச் சொல்லி
நீ பாடு...
இனி தொல்லைகளில்லை
வீர நடைப் போடு...!