ஈழத்தாயின் வீரத்தாலாட்டு

தூங்கடா கண்ணே தூங்கு
நீ மாவீரனாவாய் தூங்கடா

உன் கண்ணில் தெரியிது......உஉஉஉம்ம்ம்ம்
உன் கண்ணில் தெரியிது தமிழீழ தாகம்
அதை நீ கடக்க காலமிருக்குது தூங்கடா
கண்ணே நீ தூங்கு நாளை நீயே
மாவீரனாவாய்
தூங்கடா கண்ணே தூங்கடா,,,,

நம் தலைவர் அமைத்த.....உஉஉஉம்ம்ம்ம்,,,,,
நம் தலைவர் அமைத்த பாதையிருக்குது
அதில் நீ செல்ல காலமிருக்குது
தூங்கடா கண்ணே தூங்கு,,,,

இன்றோ நீ ஒரு குழந்தை,,,,,
இன்றோ நீ ஒரு குழந்தை - நாளை
நீயே புலியாவாய்

தூங்கடா கண்ணே தூங்கு
நீ மாவீரனாவாய் தூங்கடா

நாளை உன் பாதம்.....உஉஉஉம்ம்ம்ம்,,,,
நாளை உன் பாதம் ஈழ மண்ணை தொட்டதும்
சிங்களவன் படைகள் நடுநடுங்கி ஓடனும் கண்ணே
தூங்கடா கண்ணே தூங்கு

நாளை உன் பாதம் ஈழ மண்ணை தொடும் வரை
தூங்கடா கண்ணே தூங்கு

இன்று நம் மாவீரர் துயிலகமில்லையடா,,,,ஆஆஆஆ
கண்ணே - இன்று நம் மாவீரர் துயிலகமில்லையடா
அதை நீ மீட்டு மாவீரரை தூங்கச் செய்ய வேண்டுமடா

இன்றோ நீ ஒரு குழந்தை,,,,,
இன்றோ நீ ஒரு குழந்தை - நாளை
நீயே புலியாகி சிங்களவன் கோட்டையை தகர்திட
இன்று நீ தூங்கடா கண்ணே தூங்கு

இன்றோ,,,,,இன்றோ உன் தாயின் தொட்டிலில் தாலாட்டு
நாளையோ.... மாவீரர் துயிலத்தில் தாலாட்டுவேனடா,,,,
கண்ணே,,,,,

=== க.பிரபு தமிழன்

எழுதியவர் : க.பிரபு தமிழன் (23-Aug-13, 3:28 pm)
பார்வை : 242

மேலே