மழை துளியின் கோபம் !!!

சுதந்திரம் வந்த பின்னும்
சுகாதாரம் வராதது ஏனடி பெண்ணே ?

மண் என்னும் மங்கையை நாடி
மண்ணுலகம் வந்தேன் மழை துளியாய்!!

மழை நீராய் ஓட வேண்டிய நான்
சாக்கடை நீராய் ஓடுகிறேன் !

மங்கையே, நீ உன் தாய்க்கு பயந்து
மறக்க சொல்கிறாய் !! என்னை

மாண்டது நான் மட்டுமல்ல!
மண்ணின் தன்மையும் தான் !!

மங்கையே! உன்னையும் மறந்து விடுவேன்-ஆனால் என்னை
மாசுபடுத்திய மனிதர்களை
எப்படி மறப்பேன் !!

மங்கையரை பார்க்கும் மாணவ
மண்ணுலகம் மாசுபடுவதையும் பார் ,

காலட் படையும்,
யானை படையும் - போரை வெல்ல ,
தேசிய மாணவர் படை -
சுற்று சுழல் மாசுபாடை வெல்ல ,

மாணவ வெகுண்டெழு! மாணவனாக அல்ல
மாசு துடைக்கும் மன்னர்களாக!!

எழுதியவர் : சித்தராஜ் 007 (24-Aug-13, 12:09 pm)
சேர்த்தது : சித்தராஜ்மு
பார்வை : 109

மேலே