சனிக்கிழமை ஐந்துமணி சாயும்... காலம்...? ஜோதிடகாலம்.

ஞாயிறு விடியலிலே
ஜோதிட நல்பொழுதினிலே
இருமண இடம்மாற்றம்
விழாகால ஊர்கோலம்

உற்றார் உறவினரும்
அந்தி சனிக்கிழமை
ஐந்து மணி சாயும்காலம்
நல்ல..... நேரமென

உரைத்த ஜோதிடரே
சென்ற வாகனமோ
விபத்தில் அரங்கேற
வீணாய் உயிர்சேதம்

ஏனோ ஜோதிடரே
என் தங்கை
வாழ்கைகோர்
விடை சொல்ல வருவீரோ.....?

எழுதியவர் : கோபிநாதன்.கு (24-Aug-13, 5:39 pm)
சேர்த்தது : கோபிநாதன்
பார்வை : 86

மேலே