விடாதா அகம்பாவம்
கதிரொளியில் மின்னும்
வானத்தைப் பார்த்து
பார்த்து வியந்தேன் .
இள சிவந்த நிறமும்
வெளிர் வானமும்
சேர்ந்து காலை
புலரும் காட்சியைக்
கண்டு மெய் மறந்து
நின்றேன் அமைதியாக.
என்ன ஓர் அழகு
என்னே ஓர் அடக்கம்
மனிதனை பற்றி
நினைப்பு வந்தது
அவனின் செயல்கள்
எதையோ சுட்டிக் காட்டின
அளப்பறியா பேச்சும்
அலட்டும் சிரிப்பும்
விதண்டா வாதமும்
அதிகாரமும் அவனின்
தன்மையை எடுத்துக் காட்டின
துணுக்குற்ற மனம்
வினவியது .கேவலுடன்
இயற்கை அவனுக்கு
பாடமாக அமையாதா?
விடி வெள்ளியை
பார்ப்பவனுக்கு
விடாதா அகம்பாவம்.?