மொழி !
மொழி !
இயற்கையின் மொழி அழகு - நம்
இதயத்தின் மொழி நட்பு !
அன்னையோ மொழியின் அகராதி !
அனைவரும் அறிந்தமொழி காதல் !
முத்தம் காதலின் தனி மொழி !
நித்தம் இயம்புவது தத்தம் மொழி !
பூக்கள் சிரிப்பின் மொழி !
பூவையர் மொழி கண்ணின் வழி !
மூப்பில்லா மூத்த மொழி
மூவேந்தர் கைதவழ்ந்த மொழி
எங்கள் உயிராகும் தமிழ்மொழி !!
நட்பில் nashe