பயம்
![](https://eluthu.com/images/loading.gif)
வறுமையின் வீட்டில்
தொல் பொருளொன்று
தன் மீசையை முறுக்கி
பெருமையாய் பேசும் கேளீர்
என் வீட்டு மனையாள்
ஏவாயுதம் நான்
கையிலெனை எடுத்தால்
கத்திய குழந்தையும்
கம்முன்னு அடங்கும்
கட்டிய கணவனும்
மெல்ல ஒதுங்குவான்
சீறும் பாம்பும்
அமைதியாய் போகும்
என் வீட்டு அழுக்குகள்
மூலையில் ஒதுங்கும்
யாவும் பயம் அவளுக்கல்ல
முறுக்கு மீசை துடைப்பதிற்கே