உண்டு உண்டு உண்டு

விண்ணில் மின்னல் பூத்து விட்டால்
மண்ணில் நல்ல மழை உண்டு !

பெய்யாமல் மழையும் பொய்த்து விட்டால்
பூமியில் தண்ணீர் பஞ்சம் உண்டு !

புயலால் விளைச்சல் பாதிக்கப் பட்டால்
விலையில் என்றும் ஏற்றம் உண்டு !

மின்சார உற்பத்தி குறைந்து விட்டால்
மின்வெட்டு என்பது தினம் உண்டு !

சிக்கனம் என்பது தெரியா விட்டால்
வரவுக்கு மீறிய செலவு உண்டு !

சேமிப்பு என்பது இல்லா விட்டால்
எதிர் காலத்தில் அவஸ்த்தை உண்டு !

இறந்தபின் கண்களை தானம் செய்தால்
இருவரின் பார்வைக்கு வழி உண்டு !

நெகிழிப்பை நாமும் ஒழிக்கா விட்டால்
நிலம் மலடாகிட வாய்ப்பு உண்டு !

இதயத்தில் காதல் பூத்து விட்டால்
கவிதைகள் பிறக்க வழி உண்டு !

கற்பனையில் உதித்த கவிதை யெல்லாம்
இணையத்தில் பதித்திட இடம் உண்டு !

பெரியோரை மதித்து சொல்கேட்டால்
அனுபவ மொழிகளால் பலன் உண்டு !

கூட்டுக் குடும்ப அமைப்பினிலே
வாழ்க்கைக்குப் பாதுகாப்பு மிக உண்டு !

பக்தி மார்க்கத்தில் மனம் லயித்தால்
உள்ளத்தில் அமைதி என்றும் உண்டு !

தன்னைத் தானே உணர்ந்து கொண்டால்
நம்முள் என்றும் சிவம் உண்டு .....!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (26-Aug-13, 2:15 pm)
பார்வை : 182

மேலே