கையேந்தி கேட்கிறோம்.........

கையேந்தி கேட்கிறோம் உன்னை
கருணைகொண்டு பார்ப்பாயா எங்களை
அழுது அழுது கேட்கிறோம் உன்னை
அரவணைக்க வருவாயா எங்களை

பிணங்களை சுற்றி படுக்குகிறோம்
பிணவாடையில் தவிக்குகிறோம்
பிணங்களை சுமந்து இயலாமல்
இங்கு பிணமாகிப் போகின்றோம்

வெள்ள நீரை சுமந்த வீதிகளை
மனித குருதி நீரை சுமக்க காண்கின்றோம்
இரத்தம் சுமந்த எங்கள் சட்டைகளால்
எங்கள் இதயங்களை மறைக்கின்றோம்

பிணங்கள் புதைக்க மயானம் தேடி
வீதி வீதியாய் அலைகின்றோம்
ஒன்று இரண்டு என்றால் பருவாயில்லை
நூறு என்பதால் பெற்றோல் ஊற்றியே
எரிக்கின்றோம்

எங்கள் நாட்டைதான் நாங்கள் கேட்கின்றோம்
எங்கள் உரிமையைத்தான் நாங்கள் பரப்புகின்றோம்
எங்கள் சந்ததி சுதந்திரமாய் வாழ ஒரு நிலத்தைதான் நாங்கள் கேட்கின்றோம்

கையேந்தி கேட்கிறோம் உன்னை
கருணைகொண்டு பார்ப்பாயா எங்களை
அழுது அழுது கேட்கிறோம் உன்னை
அரவணைக்க வருவாயா எங்களை

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (26-Aug-13, 6:18 pm)
பார்வை : 153

மேலே