என் தேவதை

என்ன சொல்வேன் என்ன சொல்வேன்
எங்கே என் தேவதை
உள்ளம் விம்முது உயிர் உருகுது
என்னே என் வேதனை

குறுக்கும் நெடுக்கும்
கால்கள் கோலம் போடுதே
மனசுக்குள் புள்ளிகளாய்
மதிமுகம் வந்து போகுதே

மான்களும் மாநாடு நடத்துமோ
பூக்களும் புது தலைவி தேடுமோ
யார்வந்து என்ன
யார் வந்து சொல்ல
காவிரியே உன்னை
எதிர்பார்த்து வயல்களும் வாடுதே

கார்மேகம் உந்தன் கூந்தல்
களவாடிப் போகும்
காட்டு மயில் கூட உன்னசைவை
தொட்டு நடக்கும்

உறங்காத இதயத்தை
உன்சிரிப்பால் தட்டிவிடு
எழுதாத பக்கத்தை
உன்பேச்சால் எழுதிவிடு

வானமிங்கு தூரிகை
தந்து செல்லுமே
இதயங்கள் இரண்டுமெல்ல
இடம் மாறுமே

காதலிக்க நேரம்
காலம் ஏதுமில்லையே
காற்றும் உந்தன்
வீடுவந்து ஏவல் செய்யுமே

நீரோட்டம் இல்லாமல்
பாரோட்டம் ஏது
தேவி நீ இல்லாமல்
தேரோட்டம் ஏது

விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாலம் கட்டுவோம்
வெள்ளியைகொண்டுவந்து
விளக்குமாட்டுவோம்
கண்ணுக்கும் கண்ணுக்கும்
அணைகட்டுவோம்
காற்று கருப்பு அண்டாமல்
திருஷ்டி சுற்றுவோம்

எழுதியவர் : சுசீந்திரன் (27-Aug-13, 7:10 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
Tanglish : en thevathai
பார்வை : 51

மேலே