ஓம் நமோ நாராயணா

ஆதியும் அந்தமுமானவன்
அதிரூப சுந்தரனவன்
கதியென்று சரணடைந்தால்
கற்பகத்தரு தருபவன்

புல்லானவன் பூச்சியானவன்
கல்லானவன் கதையானவன்
காற்றானவன் நீரானவன்
சாத்தானும் அவனானவன்

நல்லதும் அவனாகி
தீயதும் அவனாகி
நல்லதத்துவம் சொல்வானவன்
கொல்லவும் செப்பிடும்
தள்ளவும் செப்பிடும்
தத்துவக் கீதை தந்தானவன்

ஆயர்பாடியில் பிறந்தவன்
ஆநிரைகள் மேய்த்தவன்
அரவப்படுக்கை கொண்டவன்
அந்தகுறுமுனி போல்வந்து
அரசன்பலி கொன்றவன்

அவதாரம்பத்து கொண்டானவன்
அந்தகல்கியும் அவனானவன்
இவனாமம் எல்லோரும் சொன்னாலும்
சிவநாமம் எப்போதும் மறக்காதவன்

கள்ளனும் அவனே
குள்ளனும் அவனே
கண்ணனும் அவனே
அண்ணலும் அவனே

பாதம் பற்றிடவே
பாவம் போக்கிடுவான்
நாமும் பற்றிடுவோம்
நமோ நாராயணா

எழுதியவர் : சுசீந்திரன் (27-Aug-13, 7:12 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 157

மேலே