ஆயுதம்
ஏந்தலில் வாழும்
ஏகாப்தியம் நான்
என் பிறப்பே
பிறர் பிறப்புக்கு
முற்றுப்புள்ளி வைக்கத்தான்
மரணத்தை தவிர
மற்றவைகளுக்கு
உடன்படாது என்
உடன்படிக்கை
கோழைகளின் கையில்
வீரமாய் வீற்றிருப்பவன் நான்
எனது தும்மலில்
துளைக்கப்படும் தோட்டாக்களால்
தொலையும் பல உடலுயிர்கள்
உணர்ச்சியற்ற எனக்கு
உயிர்களின்
வலி அறிய வாய்ப்பில்லை
குருதிகளின்
நிறம் தெரியப்போவதில்லை
என்னைப் படைத்தவனே
என்னை நம்பி வாழும்
வினோதம் நான்
அவனின் ஆயுட்கால
விரோதியும் நான்தான்..
"கவிதை வயல் 111 க்காக எழுதிய கவிதை . இதில்தான் முதல் பிரசுரம்