கிழக்கு வானம் சோகம் உனக்காக 555

உயிரே...

தூரம் தெரியாமல்
விரிந்து கிடக்கும் கடலுக்கு...

மூடி வைத்து மூடிட
முடியாது...

கண்டங்கள் கடந்து
வீசும் தென்றலுக்கு...

வேலிபோட்டு தடுக்க
முடியாது...

ஓடும் கங்கை
வெள்ளத்தை...

உன் கைகள் கொண்டு
தடுக்க முடியாது...

நீ என்னை எவளவு
வெறுத்து பேசினாலும்...

என் அன்பு உன்னை
விட்டு போகாது...

நீ என்னை வெறுக்கிறாய்
உண்மையாக அல்ல...

பொய்யாக மட்டுமே...

உன்னையே
சுவாசிக்கிறேன்...

பொய்யாக அல்ல
உயிராக...

உன் சின்ன சின்ன
கோபத்தோடு...

நீ பேசும்
போதெல்லாம்...

எனக்குள்ளே
கோடி இன்பமடி...

தென்றல் கோபம்
கொண்டால் சூறாவளி...

நீ கோபம் கொண்டால்
மௌனம்...

உயிரானவளே வேண்டும்
உன் தரிசனம்...

என் வாழ்வில்
ஒருமுறை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (28-Aug-13, 3:12 pm)
பார்வை : 119

மேலே