பள்ளிக் காதல்

வணக்கம் சார்...

யாரும்மா நீ என்று கணிப்பொறி ஆசிரியர் அவளிடம் கேட்டார்..

அதற்கு அவள், " என் பெயர் வனிதா. 11A வகுப்பிலிருந்து இங்கு மாற்றுதலாகி வந்துள்ளேன் ஐயா என்று பணிவாக கூறினாள்...

ஏம்மா... எல்லோரும் ஆங்கிலத்தை தேடி போகும் நீ தமிழ் வழியை தேடி வந்துள்ளாய்... சரி... உள்ளே வா நீ போய் உட்கார் என்று கூறினார்.

அவளும் உமா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்... உமாவிற்கு வனிதாவை முன்பே தெரியும்... பள்ளிவிழாக்களில் சேர்ந்து நடித்தும் ஆடியும் உள்ளார்கள்... வனிதா உமா பக்கத்தில் உட்கார்ந்தவுடன் காயத்ரிக்கு பிடிக்கவில்லை...

காயத்ரியும் உமாவும் உயிர் தோழிகள்... வகுப்பு இடைவேளை வரும் உமாவிடம் வந்து கத்தினாள்... ஏன்டி அவள் வந்து உன் அருகில் அமர்ந்தாள்...

உமாவும் அவளும் நம் தோழி தாம்ப்பா... நீயும் ஏற்றுக்கொள்...நாம் மூன்று பேரும் நண்பிகளாக இருப்போம்...

காயத்ரிக்கும் மனதளவில் பிடிக்கவில்லையென்றாலும் உமாவிற்காக ஒத்துக்கொண்டாள்.

மூன்று பேரும் நன்கு நண்பர்களாக பழகிக் கொண்டார்கள்... வனிதாவின் பிறந்தநாள் வந்தது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினாள்... கோபால் ஒன்று எடுக்காமல் 10,15 எடுத்துக் கொண்டான்...

உமாவும் காயத்ரியும் மத்தவங்களுக்கும் கொஞ்சம் வைப்பா என்று கிண்டலித்தார்கள்...

கணிப்பொறி ஆசிரியர் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்... மற்ற வாத்தியார்கள் போல் இல்லாமல் அனைவருக்கும் சுதந்திரம் கொடுப்பார்.. வாரத்தில் 1வகுப்பை விடுகதை விளையாட்டு, பாட்டுக்பாட்டு என்று விளையாட விடுவார்.. அதனால் எல்லோருக்கும் பிடிக்கும்.

அவருடைய விளையாட்டு வகுப்பு வந்தது... வனிதா எழுந்து விடுகதை போட்டாள்... அதற்கு கோபால் சரியான விடை கூறவில்லை.. அதனால் ஆசிரியர் தலையில் கொட்ட சொன்னார்... கொட்ட போகும் போது தான் அந்த நிகழ்ச்சி நடந்தது...

அவனை கொட்டும் போது அவன் பெஞ்சில் வனிதா வனிதா என் உயிர் காதலி என்று கிறுக்கி வைத்திருந்தான்... அதை பார்த்தவுடன் வனிதாவுக்கு கோபம் வந்தாலும் பயத்துடன் அவள் இருக்கைக்கு வந்து உட்கார்ந்து விட்டாள்... ஏன்டி ஒரு மாதிரியா இருக்க என்று உமா கேட்க ஒன்றுமில்லை என்று சமாளித்துவிட்டாள்.

வார இறுதி வந்தது... காயத்ரியும் வனிதாவும் உமா வீட்டுக்கு வந்தனர்... உமா அவர்கள் முகத்தை பார்த்தவுடன் ஏதோ நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டு வாடி மாடிக்கு போவோம் என்று இருவரையும் கூட்டிக்கொண்டு சென்றாள்...

மாடிக்கு வந்ததும் வனிதா உமாவை கட்டிப்பிடித்து அழ தொடங்கிவிட்டாள்... ஏன்டி இப்படி அழுகிறாள் என்று காயத்ரியிடம் கேட்க அவள் ஒரு கடுதாசியை உமாவிடம் நீட்டினாள்...

அதை வாங்கி படித்தவுடன் அதிர்ச்சியானாள்... என்னடி இப்படி எழுதியிருக்கான்... உனக்கு முன்பே அவனை பற்றி தெரியுமாடி என்று வனிதாவிடம் கேட்டாள் உமா...

இல்லப்பா... பிறந்தநாள் அன்று தான் அவன் பெஞ்சில் என் பெயரை எழுதி வைத்தை பார்த்தேன்... அதன் பிறகு அவனை நான் பார்க்கவே முயற்சி பண்ணவில்லை... அவன் அருகில் வரும்போதெல்லாம் எப்படியாவது தப்பித்து ஓடி விடுவேன் என்று அழுதுகொண்டே வனிதா கூறினாள்.

உமாவும் யோசித்துக்கொண்டே இருந்தாள்... எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. அதன் படி செய்வோம் என்று கூறினாள்...

என்ன ஐடியா உமா? என்றாள் காயத்ரி.

முதலில் கோபாலை பார்த்து நாம் பேசுவோம் அதுவும் ஒத்துவராவிட்டால் கணிப்பொறி ஆசிரியரிடம் கூறிவிடுவோம் அவர் நமக்கு நிச்சயம் உதவி பண்ணுவார்டி.

சரிடி பள்ளிக்கூடம் வந்ததும் கோபாலை பார்த்து உங்களிடம் தனியாக பேசனும் என்று வனிதா சொல்லி தனியாக அவனை கூட்டி வந்தாள்...

அங்கு உமாவும் காயத்ரியும் இருப்பதை பார்த்தவுடன் அவன் அதர்ச்சியடைந்தான். உமா அவன் அருகில் வந்து எப்படியிருக்கிறாய் கோபால்? என்று அமைதியாக பேசத் தொடங்கினாள்.

நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக நீ கேட்டால் உனக்கே புரியும் நீ செய்வது தவறு என்று உமா கூறியவுடன் வனிதா பற்றிய விஷயம் என்றால் பேச வேண்டாம் உமா... என்னை புரிந்து கொள்... அவளை நான் உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் உமா...

இல்ல... உன்னுடைய வயது இப்போது 16 ஆகிறது. உன் குடும்பத்தில் அப்பாவும் கிடையாது.. நீ தான் நன்கு படித்து உன் குடும்பத்தை காக்கனும்... வனிதாவிற்கும் உன்னை பிடிக்கவில்லை... அவளுக்கு பிடிக்காமல் நீ காதலித்து என்ன பயன்? நீ இப்பவே காதலிக்க ஆரம்பித்துவிட்டால் உன் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள் என்று உமா சொன்னவுடன் அவன் அழுக தொடங்கினான்.

எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு கிளம்ப தொடங்கினான்...

உமாவிற்கும் மனது கஷ்டமாக இருந்தது... இந்த நிகழ்வுக்கு பிறகு அவன் எதுவும் பிரச்சனை பண்ணவில்லை... வகுப்பில் எப்போதும் போலவே நடந்து கொண்டான்...

12ம் வகுப்பு முடிந்து நண்பர்கள் தினத்தன்று எல்லோரிடம் நோட்டில் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தாள் உமா.. அப்போது கோபால் பெஞ்சுக்கு அருகில் வந்தாள். பெஞ்சில் வனிதாவை பற்றிய எழுத்தை அடித்து கிறுக்கி வைத்திருந்தான்... உமாவிற்கு ஒருவிதத்தில் சந்தோஷமாக இருந்தாலும் அவனை நினைக்கையில் பரிதாபமாயிருந்தது.. அவனிடமும் கையெழுத்தை வாங்கி கொண்டு நன்றாக வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறுவாய் என்று கைகுலுக்கி விடை பெற்றாள்...

உமா, காயத்ரி, வனிதா மூவரும் ஒரே கல்லூரியை தான் தேர்ந்தெடுத்தார்கள்... மூவரும் முதல் வகுப்பு செல்லும் போது தான் பார்த்தார்கள்... கோபாலும் சேர்ந்திருக்கிறான் என்பதை அறிந்தார்கள்...

உமா இப்பவும் அவனிடம் நன்றாக பேசுவாள். வனிதாவுக்கும் காயத்ரிக்கும் அவனை கண்டாலே பிடிக்காது.

கோபால் நன்கு படித்து மாநிலத்திலே முதல் மதிப்பெண் எடுத்தான்... நல்ல வேளையிலும் சேர்ந்தான்... இதனை அறிந்த பிறகு வனிதா அவன் மேல் காதல் கொண்டாள்... இதனை உமாவிடம் சொன்னாள்...

அவளுக்கு பதிலாக கோபாலிடம் வனிதாவை பற்றிக் கூற அலுவலகத்திற்க்கு சென்றாள்...

எப்படியிருக்கிற உமா...

நல்லாயிருக்கிறேன் கோபால்

என்ன விஷயம் உமா...

வனிதாவை பற்றி பேச வந்துள்ளேன்... வனிதா உன்னை மனப்பூர்வமாக காதலிக்கிறாள்...

என்ன சொல்ற... நான் அதை மறந்து வெகு வருஷம் ஆயிற்றே...

இல்லப்பா...

முதல்ல நான் சொல்றத கேள் என்று உமாவின் கையை பற்றினான்...

அவளும் அவன் கையை உதறாமல் சொல்லு கோபால் என்று கூறினாள்.

ஐ லவ் யூ உமா... உன்னை நான் காதலிக்கிறேன்.

என்ன சொல்ற என்று சொல்ல வருவதற்குள் அவள் வாயை கையை வைத்து மூடினான்.

உமா உன் மூலமா தான் என்னை நல்வழியில் திருத்திக் கொள்ளமுடிந்தது. நீ என் கூடவே வாழ்நாள் முழுவதுமிருந்தால் நிச்சயம் என்னால் நன்றாக வாழமுடியும் என்று அனைத்துக் கொண்டான்...

உமாவும் அவனை விட்டு பிரிந்து செல்லாமல் ஆனந்த கண்ணீருடன் அணைத்துக்கொண்டாள்.

நன்றி ரதி தேவி
நிலா முற்றம்

எழுதியவர் : கே இனியவன் (28-Aug-13, 3:27 pm)
Tanglish : pallik kaadhal
பார்வை : 295

மேலே