மலை மின்னல் !!

^^^
^^^^^^
^^^^^^^^^^^^^
^^^^^^^^^^^^^^^^^^^^
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மலைமின்னல்
உயர்ந்தோங்கிய வளமலையில்,
உச்சி வரைப் பச்சைப்போர்வை
இயற்கை இளநங்கை
இன்பமாய் இழைந்திருக்க ,

விண்ணின் மின்னல் மலையில்
விசையுடன் பாறையை
திண்ண்மைக் கூர் கழி
கீறினார்ப் போல

தண்ணீரோ,பன்னீரோ,
தெங்கின் இளநீரோ
என்னும் வண்ணம் எகத்தாளமாய்

மலை உச்சியினைப்
பிளந்தாற்போல்
கிளை கிளையாய்
பிரிந்து

அழகாக அலைந்து
வீழ்ந்து ,திரிந்து
ஒடிந்து ,வளைந்து ,
பாறையில் கீறி
கீழே வழியும்
மலைமின்னாலே !

அருவியே !
ஆருயிர் அழகியே !
தரையில் குவிந்து
குளிர் புனலானவளே

நீ!நிலத்தில் குளமாகி
நின்ற போது
வளர் கெண்டை மீன்கள்
வால்துடுப்பினால்
போர்க்களம் போலார்ப்பரிக்கும்
நீர்க்களத்தை நெடும் படையாய்,
எதிர்க்கும் வண்ணமீன்கள் !

நீர்வாத்துக் கோழிகள்
கூரலகால் _-
மீனைக் கொத்தித
தூக்கும்

நீர்ச்செடிகள் தம் வாய்
பிளந்து வருந்தும்
ஆர்ப்பரிக்கும் நாரைக்
கொக்கு அலகில்
சிக்கிய மீனைக்
கூட்டில் குஞ்சுகளுக்குக்
கக்கியே ஊட்டும்
தாய்மைப் பாசத்தோடு
கூட்டும் தன சிறகாலே
அரவணைத்து !

மலை மின்னல் அருவியின்
நிலையெல்லாம் இயற்கை
அலைகின்ற மனத்தையும்
அமைதிப்படுத்தி ,
ஆனந்தம் அளிக்கும் !

இயற்கை காட்டும்
இன்பம் எல்லாம் இனியதே !

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (28-Aug-13, 9:30 pm)
பார்வை : 122

மேலே