மாய உலகம்
அலை பேசிக்குள்
அடங்கி போனது
உறவும் நட்பும்.....
முகம் மறக்கச்
செய்த
முக நூலில்
முன்னுரை மட்டுமே
நலம்......
எல்லாம்
கணி பொறி
செய்து விடும்
சரி... கணிப் பொறியை......?
நகரத்தில்
எண்ணெய் காய்ச்ச
ஆள் எடுக்கப் படுகிறது......
கத்திரி வெயிலில்
கோட்டு போட்டு
அலைபவர்கள் கவனிக்க...
எல்லாவற்றிக்கும்
சிரிக்க வேண்டும்..
மரணத்துக்குமா......?
நண்பர் வீடு
உறவினர் வீடு என
முகவரி காட்டிக்
கொடுக்கும்
இயந்திரம் - இனி
அதுவாகவே நலம்
விசாரித்து திரும்பும்...........
மரம் வெட்டி
மனிதன் வெட்டி
இப்போது மானுடம்......
கருத்து சுதந்திரம்
கற்பை சூறையாடியவன்
சிறார் என்றே
அழைக்கப் படுகிறான்...........
தப்பித்து பிழைத்த
கடவுள்
கோயிலில் யானையாகி
வெகு காலமாயிற்று......
இனி
காற்றையும்
காசு கொடுத்து
வாங்கலாம்.......
அங்கும் தொங்கிக்
கொண்டிருக்கும்
பாலிதீன்........