வறுமையே வெளியேறு

ஏழைகள்
பக்தி மான்கள்
ஒவ்வொரு நாளும்
விரதம் இருப்பர்.
ஒரு வேளை
உணவு
வரம் வேண்டி.

'அம்மா' னு அழைக்க
பெற்றெடுத்தேன் .
கற்று கொடுக்காமலே
'பசி'னு சொல்லி அழ
பிறவி வரமோ?
பார்த்து துடிக்குது நெஞ்சு.
கருவில் வைக்க
வழி சொல்.
ரத்தம் குடித்தாவது
பசியாரட்டும்.

ஏக்கத்தோடு
துக்கனாங்குருவி
சுத்தி சுத்தி வரும்
மனிதரை போல் சுயநலமாய் !
உச்சியிலே கூடு கட்ட
குச்சி எலும்புக்காக.

இன்னொரு
கதிரவன் வேண்டும்.
வெளிச்சம் போதவில்லை
சூரியன் சுட்டெரித்தும்.
இருண்டே கிடக்குது
எங்கள் வாழ்க்கை.

விருந்தாளியாய்
வந்துபோன சிரிப்புக்கும்
சீக்கு வந்ததாம்.
எங்களோடு
பழகி பழகி.
உடனிருக்கும்
வறுமைக்கு வாராதோ?
ஓர் நோய்.
கருணையற்ற வியாதி!

ஒரு கண்ணில் வெண்ணை
மறு கண்ணில் சுண்ணாம்பு"
வானமே
வாசித்தது உன்னால் தானோ?
பூமி அழுதால்
அழுகிறாய்!
பூலோகவாசி சுருண்டால்
நழுவுகிறாய்.

ரோசா சிரிக்கும்.
மல்லிகை நறுமணம்
மனதை வருடும்.
வர்ணித்த வித்தகரே!
வாழ நாதியற்றோர்க்கு
வாசனையும் கசக்கும்
வரிகளோடு கோர்க்க மறந்திரோ!!

வெள்ளையன் வெளியேற
விடுதலை பெற்றிட
பாடிய கவிஞர்களே!
எழுதுகோலை தீட்டுங்கள்
வழி பிறந்திட
வறுமை வெளியேற!!

வறுமையே வெளியேறு! வாசல் வராதே!!
-செஞ்சிக்கோட்டை மா.மணி

எழுதியவர் : -செஞ்சிக்கோட்டை மா.மணி (29-Aug-13, 12:38 pm)
பார்வை : 324

மேலே