ஒரு நண்பன் கிடைப்பானா..?

என் நட்பை மட்டும் நேசிக்க
எனகோர் தோழன் கிடைப்பானா?
விதியால் வீதியில் நடக்கும்போது
நட்புடன் பேரை சொல்லி அழைக்க
என் நட்பை மட்டும் நேசித்து
எனக்கோர் தோழன் கிடைப்பானா?
தோல்விகள் என்னை தாலாட்ட என்
தோள்களை தட்டி துடைப்பானா..?
சாதனை உயரம் தாண்டும்போது
சறுக்கி விழாமல் பிடிப்பானா..?
இனிய காதலி கவிழ்கும்போது
இதமாய் நெஞ்சை தடவி தர
என் நட்பை மட்டும் நேசித்து
எனக்கோர் தோழன் கிடைப்பானா?
உறவுகள் ஏளனம் எய்யும்போது
உள்ளத்தால் எனை காப்பானா..?
கெட்டவை நாடி ஓடும் போது
கொட்டு தந்து எனை தடுப்பானா..?
கல்லறையில் தூங்கும் நேரம்
கண்ணீர் விட்டு நிற்பதற்கு
என் நட்பை மட்டும் நேசித்து
எனகோர் தோழன் கிடைப்பானா..?

எழுதியவர் : குமரி பையன் (29-Aug-13, 2:30 pm)
பார்வை : 341

மேலே