தலை குனிவு.
தமிழன் இன்னொரு தமிழனுடன்
அளவளாவிக் கொண்டிருந்தான்
தமிழில் அல்ல ஆங்கிலத்தில்
புரியாமல் அவர்களயே பார்த்தேன்
மொழி புரியாமல் அல்ல
பேச்சு புரியாமல் அல்ல
தன மொழியில் ஏன்
உரையாடவில்லை என்ற எண்ணத்தில்.
பதிலாக அவர்கள் என்னை நோக்கினார்கள்
தொடர்ந்தார்கள் ஆங்கிலத்தில்
அந்த மாது முழிப்பதை பார்.
படிப்பறிவு இல்லாதது போல் தோன்றுகிறது.
பேந்த பேந்த நம்மை பார்கிறதைப் பார்.
என்று மிக ஏளனமாக பேசினார்கள்
சிரித்துக் கொண்டே அகன்றேன்
அவ்விடத்தை விட்டு .
என்ன ஒரு அகம்பாவம் மனதில்
தமிழர்களுக்கு ஒரு தலை குனிவு.