எழுத்தாளனை விட்டு விடுங்கள்

எழுதுபவன் எழுதுபவனாகவே
இருக்கட்டும்
அவன் வரவு செலவை
பார்க்கத் தொடங்கினால்
அது தான் மனதில்
வந்து போகும்
கணக்கு
சிட்டை முன் நிற்கும்
கற்பனை
புறம் போகும்.
.
இரண்டும் இரண்டும் நான்கு
என்று எளிதாகச் சொல்லலாம்
இன்று உள்ள உபகரணங்களை
வைத்துக் கொண்டு
படித்தவனும் படிக்காதவனும் கூட

எழுத்து தன்னுள் இருந்து
உற்றெடுத்து கிளம்ப வேண்டும்.
செயற்கை உதவாது
இயற்கை துணை
நிற்க வேண்டும்.

எழுத்தாளனை
விட்டு விடுங்கள்
அவன் எண்ணப்படியே.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (30-Aug-13, 7:51 am)
பார்வை : 59

மேலே