மொழி ஒரு ஓட்டம்

மொழியில் ஈடுபாடு ஒரு ஓட்டம்
மொழியியலில் கோர்வை ஒரு நாட்டம்
மொழி வாயிலாக பார்வை ஒரு ஏற்றம்
மொழியின் தீர்க்கமான கண்ணோட்டம்
யாவையுமே மிக வலிதான ஒரு வெள்ளோட்டம்.
இது யாவருக்கும் எளிதில் கிட்டாத தோற்றம்
.சுலபமாக அடைய முடியாது என்ற காட்டம்
பலரை குறுக்கு வழியில் செல்ல தூண்டும் நோக்கம்
சுருக்கமாக சொன்னால் ஒரு முறையற்ற நடமாட்டம்
எல்லா துறைகளிலும் அரங்கேறுகிறது துள்ளோட்டமாக

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (30-Aug-13, 11:07 am)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : mozhi oru oottam
பார்வை : 103

மேலே