"நிமிடத்தை கடக்க ஒரு நிமிடம்"

உன் உணர்வை நான் நேசிக்க,
என் சுவாசமும் மறுக்கிறது என் வயதின்
சுவாசத்தை சுவாசிக்க...
நீ பார்க்க, தினம் சிவக்கும் என் கன்னங்களை
கண்ட என் கனா கண்களும்
விழிக்குதடா
சில நிமிடங்கள்
என் நெஞ்சை வருத்தி !!!!!!!!!!!!!
நிமிடத்தை கூட கடக்க
நிமிடம் தேடி கிடக்கிறேன்
அந்நிமிடம்...