என் தாய்மடி..!

பணத்தை தந்தால் பொருளும் தருவர்
பொருளை தந்தால் பணமும் தருவார்
உறவுக்கு உயிரை தந்தோர் யாரென்று
உலகில் உரைப்பார் யாருண்டு கேள் ?
என் தாயை தவிர யாருண்டு கேள்..!

பிறப்பு என்றால் ஓருயிர் பிறப்பே
இறப்பு என்றால் ஓருயிர் இறப்பே
தானே இறந்து என்னோடு பிறந்து
தரணியில் வாழ்வார் யாருண்டு சொல்.?
என் தாயை தவிர யாருண்டு சொல்..!

வெறுத்தால் எனை வெறுப்பாருண்டு
உதைத்தாலுடன் உதைப்போருண்டு
வெறுத்தால் சொல்லால் உதைத்தால்
அன்பால் அணைப்பார் யாருண்டு சொல்.?
என் தாயை தவிர யாருண்டு சொல்..!

உதிரம் உறிஞ்சி உள்ளே வளர்ந்தேன்
உன்மடிபால் குடித்து பின்னர் வளர்ந்தேன்
கனவுகள் எல்லாம் கலைந்து போனால்
கண்கள் கலங்கி கைப்பிடி இன்றி

சுற்றம் எல்லாம் முற்றம் சென்று
சுமைகள் இறக்க சுற்றும் பார்த்தால்
பஞ்சணை படுக்கை தருவார் உண்டோ..?
என் தாயின் மடிபோல் தஞ்சம் உண்டோ..!

கரத்தால் தலையை தடவி தர
சுரத்தால் இதயம் வருடி விட
என் சிரத்தை சாய்த்து துயில் கொள்ள
நான் ஒதுங்கும் இடமே தாய்மடிதான்
என் தாயின் மடியே சொர்க்கமன்றோ ..!

(என் தாய்க்காக)

எழுதியவர் : குமரி பையன் (30-Aug-13, 1:51 am)
பார்வை : 188

மேலே