+அலைகடலாய் ஆசைக்கடல்!+

பட்டுடை உடுத்தி
பட்டத்து ராணியாக
சேரிப்பொண்ணுக்கு ஆசை!

பத்துகாசு அளவிற்கு
தங்கமுள்ள சங்கிலி அணிய
பட்டணத்துப்பொண்ணுக்கு ஆசை!

பத்து ரூபாய் அளவிற்கு
வைரம்வச்ச அணிகலன் அணிய
பட்டத்து ராணிக்கு ஆசை!

போகப்போக ஆச தான்!
கிடைப்பதென்னவோ பூச தான்!
ஆசையை அடக்குவது கஷ்டந்தான்!
அதுக்கு கொஞ்சம்
முயற்சி செஞசா கிட்டத்தான்!
கிட்ட உள்ள பொருளதனை
எட்டபோயி தேடாம
ஏங்கி ஏங்கி நிற்காம
எலக்கதனை நோக்கித்தான்
விளக்கெடுத்து செல்வதற்கு
எத்தனி என் ராசாவே!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-Aug-13, 3:22 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 47

மேலே